அறிமுகம்
முஃப்தி on Jan 14th 2009
இணையத்தளம், வலைப்பதிவு, கணினி மற்றும் மின்னஞ்சல் தொடர்பாக நான் கற்ற பல விஷயங்களையும், கற்றுக்கொண்டிருக்கும் சில விஷயங்களையும் தொகுத்து, குறிப்புகளாக பதிப்பதற்கே இத்தளம்.
தற்போது பணி நிமித்தமாக சவுதிஅரேபியா நாட்டில் உள்ள ஜித்தா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன்.
பணி: information technology துறை அல்ல.
கற்றது கைமண்ணளவு; கல்லாதது உலகளவு;
பதிக்கப்பட்ட இக்குறிப்புகள் காலப்போக்கில் இணையம் தரும் புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக மாறிப் போகலாம். கூகிலின் Gmail மின்னஞ்சல் வசதியை இதற்கு உதாரணமாக என் நண்பர்களிடம் அடிக்கடி கூறுவேன். ஜிமெயில் அறிமுகமான புதிதில் பிளாக்கர் வலைப்பதிவில் Gmail பற்றி எழுதிய கட்டுரைக்கும், ஜிமெயிலின் தற்போதைய வசதிக்கும் பல மாற்றங்கள் உள்ளன. ஜிமெயில் வசதி பெற அப்பொழுது உள்ள கட்டுப்பாடுகள் இப்பொழுது இல்லை. இப்பொழுது உள்ள பல வசதிகள் அப்பொழுது இல்லை. இனிவரும் காலங்களில் மேலும் பல வசதிகள் கூடும் என்பதில் சந்தேகமும் இல்லை. இதன் காரணமாகவே, எனது முந்தைய வலைப்பதிவின் (http://muftiblog.blogspot.com) பழைய கட்டுரைகளை இத்தளத்தில் தொகுப்பதை தவிர்த்துக்கொண்டேன்.
எனது மின்னஞ்சல் முகவரி muftimail (at) gmail (dot) com

