Home / Image / விருப்புரு (Favicon)

விருப்புரு (Favicon)

விருப்புரு (Favicon icon), இணைய உலாவியில் (Browser) தளத்தின் முகவரிக்கு முன்னர், ஒரு சிறிய படம் இடம்பெற்றிருக்கும். தளத்தின் முகவரியை புத்தகக்குறி (bookmark) செய்தாலும், இப்படம் உலாவியில் காட்சியளிக்கும். இதனை இணையத்தள icon, தள முகவரி icon மற்றும் shortcut icon என்றும் அழைப்பர். ஒரு இணையத்தளத்தின் தனித்தன்மையை பிறருக்கு சுட்டுவதில் விருப்புருவுக்கும் பங்குண்டு.

ஒவ்வொரு தளத்திற்கும் தனித்தனியா உருவாக்கி பயன்படுத்த முடியும். Favicon படத்தை நாமாகவே ஏதாவதொரு இமேஜ் மென்பொருளை பயன்படுத்தி தயாரிக்க முடியும் என்றாலும்கூட, இதற்கென்று பல தளங்கள் உதவுகின்றன.

உதா:
http://tools.dynamicdrive.com/favicon/

1) படத்தை (favicon.ico) தயாரித்த பிறகு, அதனை தளத்தின் root directory (main directory) யில் upload செய்ய வேண்டும். (குறிப்பு: தளம் சொந்தமானதாக இருந்தால் மட்டுமே இதற்கு வாய்ப்பு அதிகம்)

2) பிறகு தளத்தின் Root directory-யில் உள்ள index கோப்பில் கீழ்கண்ட சிறிய script-ஐ தலைப் (head) பகுதியில் இணைக்க வேண்டும்.

<link rel="shortcut icon" href="/favicon.ico"/>

ஏற்கனவே உங்கள் உலாவியில் அத்தளத்தின் புத்தகக்குறி செய்திருந்தால், அதனை நீக்கிவிட்டு சோதித்து பார்க்கலாம்.

3) Transparency படங்களை (gif or png) பயன்படுத்தி கவர்ச்சியான விருப்புருவை உருவாக்கலாம்.

About முஃப்தி