வலைப்பதிவு என்றால் என்ன?

Posted by: முஃப்தி on Wednesday, January 21st, 2009

blogging
Weblog (web + blog) / வலைப்பதிவு

நுட்பமான இணைய அறிவு இல்லாமலேயே, உலகின் எந்த மூலையில் இருந்துக்கொண்டும், செய்திகளை பதிக்க இயலும் ஒரு அமைப்புக்கு வலைப்பதிவு என்கிறோம்.

வலைப்பதிவு என்று வழக்கில் உள்ளவைகளில் அதிகமானவை subdomain-ல் அமைக்கப்படுகின்றன. பிளாக்கர் (blogger.com), வேர்ட்பிரஸ் (wordpress.com) போன்ற தளங்கள் தங்களின் பயனர்களுக்கு இலவசமாக அல்லது கட்டணத்திற்கு வலைப்பதிவு வசதிகளை வழங்குகிறது. இவ்வலைப்பதிவுகளின் தொழில்நுட்பப் பிரச்னைகளை சமாளிக்கும் விஷயங்களை அத்தளமே ஏற்று இடத்தையும் வழங்குகிறது. இவைகள் yourname.blogspot.com, yourname.wordpress.com என்பதாக முகவரி தருகிறது. இவ்வலைப்பதிவுகளை இணையத்தளம் என்று அழைப்பது தவறாகும்.

பிரபலங்கள் தமது சொந்த தளங்களில் வலைப்பதிவுகளை நிறுவி அதனை வலைப்பதிவு என்றே பிறருக்கு அறிமுகப்படுத்துகின்றனர். உதா: http://www.aamirkhan.com/blog.htm

பிளாக்கர் வழங்கும் வலைப்பதிவு வசதியை நமது சொந்த தளத்திலேயே நிறுவ முடியும். அதேபோல், wordpress.org வழங்கும் வலைப்பதிவு மென்பொருளை நமது தளத்தின் root directory அல்லது sub directory-யில் நிறுவி, மேலதிக வசதிகளை இணைத்து இணையத்தளமாக அழகு பார்க்கவும் முடியும்.

பல பிரபலமான இணையத்தளங்கள் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு மென்பொருளை பயன்படுத்துகின்றன.

Most Commented Posts

பிரிவு: Weblog | 6 responses so far

6 Responses to “வலைப்பதிவு என்றால் என்ன?”

  1. சர்தார்on 21 Jan 2009 at 10:58 am 1

    வாழ்த்துக்கள் பல!

    இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான இது போன்ற தொழில்நுட்பப் பதிவுகள், இணைய உலகில் பணியாற்றும் பலருக்கு பயன் தரக்கூடியதாக அமையும்.

  2. ஜமீல்on 22 Jan 2009 at 4:37 am 2

    பயனற்ற பல பக்கங்கள் ஆயிரக் கணக்கில் மலிந்திருக்கும் இக்காலை, பயனுள்ள பக்கத்தை அளித்திருக்கும் – பக்கங்களை அளிக்கவிருக்கும் – தங்களுக்கு வாழ்த்துகள்!

  3. jafaron 22 Jan 2009 at 8:15 am 3

    வாழ்த்துக்கள்!

  4. Abdul azeezon 23 Jan 2009 at 11:47 pm 4

    A good deed to public.

  5. ஹஸன் கமருதீன்on 27 Feb 2009 at 3:10 am 5

    தேவையான படைப்புகள்…. வரவேற்கிறோம்….

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்….

  6. H.Hajimohamedon 28 Apr 2009 at 9:36 am 6

    Assalaamu Alaikkum.
    பயனற்ற பல பக்கங்கள் ஆயிரக் கணக்கில் மலிந்திருக்கும் இக்காலை, பயனுள்ள பக்கத்தை அளித்திருக்கும் – பக்கங்களை அளிக்கவிருக்கும் – தங்களுக்கு வாழ்த்துகள்!

    Thank you.

Comments RSS

Leave a Reply